Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 10,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (10:16 IST)
கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிய நிலையில் நேற்று சுமார் 6000 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 9629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,013 ஆக உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகும்.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதோடு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

108 ரூபாய்க்கு 28 நாட்கள் பிளான்.. பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் புதிய திட்டம்..!

திருச்சி எஸ்.ஆர்.எம் ஓட்டல் விவகாரம்: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம்..!

ஈரோடு இடைத்தேர்தல் போல், விக்கிரவாண்டி தேர்தல் இருக்கக் கூடாது: அண்ணாமலை

தனியார் பள்ளிக்குள் திடீரென புகுந்த சிறுத்தை. ஆசிரியர்கள், மாணவிகள் கடும் அச்சம்..!

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த கம்யூனிஸ்ட் கட்சி: அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்.

அடுத்த கட்டுரையில்
Show comments