ஒரே நாளில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:20 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் இன்று தினசரி பாதிப்பு 8 ஆயிரமாக பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 8,503 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,46,74,744 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 624 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,74,735 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,41,05,066 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 94,943 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments