24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா: குறைந்து வரும் பாதிப்பு நிலவரம்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (09:40 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,38,71,881 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 278 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,49,538 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,31,75,656 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,46,687 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments