Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (06:34 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தரப்பில் இருந்தும் அரசியல் கட்சி தலைவர்களிடமும் கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது
 
இருப்பினும் மத்திய அரசு இதையெல்லாம் காதில் வாங்காமல் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருகிறது. வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் ரூ.100 தாண்டியுள்ள பெட்ரோலின் விலை தமிழகம் உள்பட ஒரு சில மாதங்களில் ரூ.100ஐ நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 91.45 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்துள்ளதாகவும் 84.77 ரூபாயாக ஒரு லிட்டர் விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமின்றி சமையல் கேஸ் விலையும் உயர்ந்துள்ளதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments