Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திஹார் சிறையில் இருந்த காங்கிரஸ் பிரமுகருக்கு திடீர் நெஞ்சுவலி!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (08:55 IST)
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் சமீபத்தில் சட்டவிரோத பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கடந்த மாதம் ஜாமீன் கிடைத்தது. இதனை அடுத்து 51 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார் 
 
இந்த நிலையில் ஜாமீனில் விடுதலையாகி அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இதுகுறித்து சிவகுமாரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார்  திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்றதால் அவரது உடல்நலத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே அவர் மார்பு மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments