Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதம் ரூ.18,000 .. அதிரடி அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (09:42 IST)
மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதம் 18,000 கௌரவ தொகை வழங்கப்படும் என்று முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் 2025ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி பல வாக்குறுதிகளை அளித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், டெல்லி சட்டமன்றத்துக்கு எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், ஏற்கனவே தகுதி உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2100,  60 வயது மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை உள்ளிட்ட அறிவிப்புகளை கட்சியின் தலைவர் எதிர்பாரா அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது டெல்லியில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள் மற்றும் குருவாராக்களில் பணியாற்றும் கிராந்தி ஆகியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 18,000 ரூபாய் கவுரத்தொகை என்ற திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments