Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை - தருண் விஜய் தகவல்

Webdunia
புதன், 6 ஜனவரி 2016 (04:08 IST)
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என தருண் விஜய் தெரிவித்தரா்.
 

 
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட சேவா பாரதி நிர்வாகிகளை தருண்விஜய் பாராட்டினார்.
 
பின்பு, நிவாரண பணிக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், கனமழையால் பெரும் துன்பத்திற்கு உள்ளான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது பாராட்டுக்குரிய செயல். தமிழக மக்களின் இந்த செயலை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
 
வெள்ள நிவாரண உதவியாக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை வழங்கி உள்ளேன். இதில், நிவாரண பணி மற்றும் கட்டிட பணிக்காக சேவாபாரதியிடம் ரூ.20 லட்சம் வழங்கி உள்ளேன்.
 
மேலும், மனிதவள மேம்பாட்டு துறை மூலம் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்து சர்வதேச அளவில் பரப்புவேன். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை பிப்ரவரி மாதம் திறக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments