Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"விஸ்வரூபமெடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்" - சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது ஆந்திர அரசு..!!

Senthil Velan
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (20:00 IST)
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஆந்திர அரசு  உத்தரவிட்டுள்ளது. 
 
முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்ய விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். 
 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுக்கு, ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார்
 
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் டி.ஐ.ஜி., மற்றும் ஒரு எஸ்.பி., மற்றும் இரு டி.எஸ்.பி.க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.


ALSO READ: தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!
 
இந்த குழு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் லட்டு பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலந்தால் கோடி கணக்கில் அபராதம் - நீதிமன்றம் எச்சரிக்கை..!!

பெற்ற தாயை பலாத்காரம் செய்த 48 வயது மகன்.. நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு..!

திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற பெண்.. எளிமையாக நடந்த பதவியேற்பு விழா..!

புல்வாமா தாக்குதல் குற்றவாளி.. திடீரென சிறையில் உயிரிழந்ததாக தகவல்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments