Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடியேற்றதுடன் துவங்கிய பிரம்மோற்சவ விழா...

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (20:39 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. 


 
 
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரிய சே‌ஷ வாகன வீதி உலாவும் நடக்கிறது. 
 
இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 25 ஆம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பல்லக்கு வாகனம், 26 ஆம் தேதி காலை கற்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
 
மேலும், 27 ஆம் தேதி காலை மோகினி அவதாரமும், இரவு கருட சேவையும் நடைபெறுகிறது. 28 ஆம் தேதி காலை ஹனுமன் வாகனம், மாலை தங்க தேரோட்டம், இரவு கஜ வாகனம், 29 ஆம் தேதி காலை சூர்ய பிரபை, இரவு சந்திர பிரபை, 30 ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறுகிறது. 
 
நிறைவு நாளான அக்டோபர் 1 ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் வீட்டிற்கு நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி.. பெற்றோருக்கு ஆறுதல்..!

ரஷ்யா, ஜப்பானை தாக்கிய சுனாமி இந்தியாவையும் தாக்குமா? சுனாமி ஆய்வு மையம் தகவல்..!

பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு சிறு நிம்மதி..!

ஒரு வாரமாக சரிந்த தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரு சவரனுக்கு இவ்வளவு உயர்வா?

ஆந்திர மதுபான ஊழல்: ஹைதராபாத்தில் ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் - ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களுக்கு நெருக்கடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments