Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு ஊழியர்களுக்கு நேர கட்டுப்பாடு.! காலை 9.15-க்குள் வராவிட்டால் என்னவாகும் தெரியுமா.?

Senthil Velan
சனி, 22 ஜூன் 2024 (15:09 IST)
மத்திய அரசு ஊழியர்கள் தினமும் காலை 9.15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டுமென்றும் இல்லையென்றால் சாதாரண விடுப்பில் அரை நாள் கழிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் காலை 9 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத தாமதத்திற்கு 15 நிமிடங்கள் அவகாசம் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அரசு ஊழியர்கள் காலை 9.15-க்குள் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்யாவிட்டால், கேசுவல் லீவ் எனப்படும் சாதாரண விடுப்பில் அரை நாள் கழிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும், ஒரு குறிப்பிட்ட நாளில் பணியாளரால் அலுவலகத்திற்கு வர முடியாவிட்டால், அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் அல்லது சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட வழக்கு.! திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..!
 
பொதுவாக மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை செயல்படுகின்றன. ஆனால், ஜூனியர் நிலையிலான அலுவலர்கள் காலையில் தாமதமாக வந்து மாலையில் சீக்கிரமே வீட்டுக்குத் திரும்பிவிடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. பெரும் பரபரப்பு..!

தை அமாவாசை.. சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி உண்டா? வனத்துறை அறிவிப்பு..!

மலேசியா போலவே மருதமலையில் முருகன் சிலை.. 160 அடி உயரத்தில் அமைக்க திட்டம்..!

பிளஸ் 2 மாணவரை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளம்பெண்.. போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு..!

நம்பகமான கூட்டாண்மைக்கு உறுதி பூண்டுள்ளோம்.. டிரம்ப் உடன் பேசியபின் மோடியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments