Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக் மூலம் 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் கேட்டு மிரட்டிய மாணவன்

ஃபேஸ்புக் மூலம் 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் கேட்டு மிரட்டிய மாணவன்
, சனி, 12 செப்டம்பர் 2015 (12:47 IST)
ஹைதராபாத்தை சேர்ந்த அப்துல் மஜித் என்ற பொறியியல் மாணவன் ஃபேஸ்புக்கில் பெண்கள் பெயரில் பல போலி கணக்குகளை உருவாக்கி பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களை அவ்ர்களுடன் பழகி பெற்று கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளர்.

அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவியின் புகாரின் மூலம் இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அப்துல் மஜீத் பணம் கேட்டு மிரட்டியதை தனது தாயிடம் தைரியமாக கூறினார் ஜனனி.

தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை சாட்டிங் மூலம் சேகரித்தார் அவரது தாய். மேலும் அவரது மிரட்டல்களை பதிவு செய்து தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களுடன் தனது மகள் ஜனனியுடன் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்.

காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி அப்துல் மஜீத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரது செல்போனில் இருந்து பல்வேறு மாணவிகளின் 80 நிர்வாண படங்களை காவல் துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஒன்றரை வருடங்களாக ஃபேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி கணக்குகளை தொடங்கி பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகியுள்ளார்.

பலர், இவர் ஆண் என்றே தெரியாமல் பழகியிருக்கிறார்கள். அப்துல் மஜீத் நன்கு பழகிய பெண்களிடம் காதல் மற்றும் ஆபாச உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி அவர்களது நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்பார். பல பெண்கள் அவர் கேட்டபடி தங்களது நிர்வாண படங்களை செல்போனில் படம் எடுத்து அனுப்பி உள்ளனர்.

நிர்வாண படங்களை அனுப்பிய மாணவிகளிடம் அந்த படங்களை இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறியும், பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக கூறியும் அப்துல் மஜீத் பணம் பறித்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அவருக்கு பணம் கொடுத்து உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையில் அப்துல் மஜீத் பல்வேறு பெண்கள் பெயரில் 6 போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி 200 பெண்களை மிரட்டி பணம் பறித்து உள்ளான் என்பது தெரிய வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சமும், இன்னொரு பெண்ணிடம் இருந்து ரூ.86 ஆயிரமும் பறித்து உள்ளார்.

அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துறையிடம் தயங்காமல் புகார் செய்யலாம் என்று கூறி அதற்கான செல்போன் எண்களை வெளியிட்டு உள்ளனர் காவல் துறையினர். இதுவரை 80 புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil