Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வருடத்திற்கு முன் இறந்தவரின் வாக்கு பதிவு.. 3 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

Siva
திங்கள், 22 ஏப்ரல் 2024 (11:43 IST)
ஆறு வருடங்களுக்கு முன்னர் இறந்தவரின் வாக்கை பதிவு செய்த மூன்று தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கேரளாவில் வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தற்போது தபால் வாக்குகள் வீடுகளுக்கு சென்று பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் பத்தினம் திட்டா என்ற பகுதியில் 85 வயது மூதாட்டியான அன்னம்மாள் என்பவரது வாக்கை தேர்தல் அதிகாரிகள் பதிவு செய்த நிலையில் அன்னம்மாள் என்பவர் ஆறு வருடத்திற்கு முன்பே இறந்து விட்டார் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அன்னம்மாள்  என்பவரின் மருமகளும் அன்னம்மாள் என்ற பெயரை உடையவர் என்பதால் 85 வயது அன்னம்மாள் வாக்குக்கு பதிலாக மருமகள் அன்னம்மாள் வாக்கை பதிவு செய்து வந்து விட்டதாக தபால் தேர்தல் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
 
இது குறித்து விசாரணை செய்த தேர்தல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மூன்று தேர்தல் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் சர்ச்சைக்கு உள்ளான வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

சென்னை விமான நிலையம் அருகே பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை.. ஐடி பொறியாளர் பரிதாப பலி!

5 மாதத்தில் ஒரு கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் மோசடி? - ராகுல்காந்தி ஆதரங்களுடன் பேட்டி!

தமிழகத்தின் மாநில கல்வி கொள்கை.. நாளை அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments