Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பு- காங்., தலைவர் கார்க்கே

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (21:06 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்தார்.
 
இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 2 வது கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியானது இதில், முக்கிய வேட்பாளர்கள் யார் எண்ற தகவல் இருந்தது.
 
மக்களவை தேர்தலையொட்டி, உழவர் நீதி, இளைஞர் நீதி, மகளிர் நீதி, உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது. அதில், ஏழை குடும்பத்து பெண்களுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை  மத்திய அரசில் காலியாக உள்ள 30 லட்சம் பணிகள் நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இன்று தொழிலாளர் நீதி என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் வாக்குறுதிகள் அறிவித்துள்ளது.
 
அதன்படி, தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக  உயர்த்தப்படும்.
 
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச  ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
 
அமைப்பு சாரா வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், சமூக பாதுகாப்பு, பாதுகாப்பான வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுடன் இதர சலுகைகள் தனியார் துறைக்கும் கட்டாயமாக்கப்படும்; தற்போதைய அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட  தொழிலாளர் சட்டவிரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தது.
 
இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர்  மல்லிகார்ஜூன கார்க்கே தெரிவித்துள்ளதாவது:
 
'' ஜனநாயகத்தையும், நமது அரசியலமைப்பையும் சர்வாதிகாரத்திலிருந்து காப்பாற்ற இதுவே கடைசி வாய்ப்பாகும். வெறுப்பு, கொள்ளை, வேலையில்லாத் திட்டாட்டம், விலை உயர்வு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக இந்திய மக்களாகிய  நாம் ஒன்று சேர்ந்து போராட்டுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments