Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த எருமையின் ஆண்டு வருமானம் ரூ 50 லட்சம்

இந்த எருமையின் ஆண்டு வருமானம் ரூ 50 லட்சம்
, புதன், 1 மார்ச் 2017 (16:38 IST)
ஒரு எருமையின் ஆண்டு வருமானம் 9.25 கோடி என்பது அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விசயம்தானே.


 

அந்த எருமையின் பெயர் யுவராஜ். அரியானாவைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவர் இந்த யுவராஜை வளர்த்து வருகிறார். தினமும் 20 லிட்டர் பால் யுவராஜ் குடிப்பதற்கு கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்கள், என அதன் உணவு பட்டியல் நீள்கிறது. யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல் 5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு செறிவாக்கம் செய்யப்பட்டு ஒரு குப்பி விந்தணு ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை கரம்வீர் சிங்கிற்கு லாபம் கிடைக்கிறது. ரூ.9.25 கோடி மதிப்புள்ள இந்த எருமையின் எடை 15 குவிண்டால்.

இது குறித்து கரம்வீர் சிங் கூறியபோது, யுவராஜை எங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறோம். இந்த மாட்டை வெளி நாட்டினர் அதிக தொகைக்கு விலை பேசினர். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதனால்தான் ஓ.பி.எஸ்-ஐ ராஜினாமா செய்ய வைத்தனர் - மாஃபா பாண்டியராஜன் தகவல்