Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

Mahendran
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (13:18 IST)
குஜராத் மாநிலத்தில் டிசம்பரில் ஏற்கனவே இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மூன்றாவது முறையாகவும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
டிசம்பர் 7ஆம் தேதி மற்றும் டிசம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும், அதற்கு முன்பு நவம்பர் மாதத்திலும் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், குஜராத்தில் உள்ள கட்ச் என்ற மாவட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் இது 3.2 என பதிவானதாகவும் நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் இல்லை என்றாலும், பல கட்டடங்களில் நில அதிர்வு தெரிந்தது என்றும், இதனால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதே கட்ச் மாவட்டத்தில் தான், கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டு, கிட்டத்தட்ட 14,000 உயிர்கள் பறிபோகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதலா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை..!

தென்கொரியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 120ஆக உயர்வு: அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்.. 19 பேர் பலி என தகவல்..!

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments