Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்.. அதிர்ச்சியூட்டும் செய்தி

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (14:27 IST)
வெங்காயத்தின் விலை தற்போது உயர்ந்திருக்கும் நிலையில், பீகார் மாநிலத்தில் ஒரு கொள்ளை கும்பல் 100 வெங்காய மூட்டைகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்தது. அதனால் சென்னையில் ஒரு கிலோ வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் தீரஜ் குமார் என்பவருக்கு சொந்தமான குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 வெங்காய மூட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 8 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் கல்லாவில் இருந்த 1.83 லட்ச ரூபாயும் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தீரஜ் குமார், போலீஸாரில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் குடோனில் இருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments