Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

Senthil Velan
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (13:55 IST)
திருப்பதி லட்டில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவற்றை கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள் என முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு வேதனை தெரிவித்துள்ளார்.
 
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டில் விலங்குகளின் கொழுப்பை கலந்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் அதன் புனிதத்தை கெடுத்துவிட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். 
 
இதனை தொடர்ந்து  திருப்பதி லட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.   திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.  இந்த அறிக்கை திருப்பதி பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்த்து மகாபாவம் செய்துவிட்டார்கள் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.


ALSO READ: பைத்தியத்திற்கு வைத்தியம் பாருங்கள்.! பாடகி சுசித்ராவை மறைமுகமாக தாக்கிய வைரமுத்து.!!
 
திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டின் தரம் மற்றும் சுவை குறித்து புகார் அளித்தும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ரமண தீட்சிதலு குற்றம் சாட்டி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமலுக்கு வந்த புதிய வன்கொடுமை தண்டனை சட்டம்! - தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சியை கைவிடும் இந்தியா கூட்டணி.. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு..!

மனைவியை விவாகரத்து செய்தது முட்டாள்தனமான முடிவு: பில்கேட்ஸ்

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments