Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை பெல்டால் தாக்கிய மாணவி! வைரல் வீடியோ

பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை பெல்டால் தாக்கிய மாணவி! வைரல் வீடியோ
Webdunia
சனி, 24 ஜூன் 2023 (20:50 IST)
குஜராத் மாநிலத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற இளைஞர் ஒருவரை பள்ளி மாணவி ஒருவர் பெல்டால் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம்  அகமதாபாத் நகரில்   இரண்டு சகோதரிகள் பள்ளிக்கு சென்றறு வந்துள்ளனர். இவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் பள்ளிக்குச் சென்றபோது,  ஒரு வாலிபர் அவரை பின் தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து, அந்த மாணவி தன் மூத்த சகோதரியிடம் கூறியுள்ளார். அதன்பின்னர், விஜய் சர்காதே என்ற அந்த வாலிபருக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டனர்.

அதன்படி,  ஒரு நாள் இளைய சகோதரி சைக்கிளில் செல்லும்போது, சர்கர்தே அவரது கையைப் பிடித்து, பரிசு கொடுத்து, முத்தம் கொடுக்க  முயற்சித்து,பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றுள்ளார்.

இதுபற்றி தன் தயாரிடம் மாணவி கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த மாணவி சைக்கிளில் செல்லும்போது, விஜய் சர்க்காதே அவரை  மீண்டும் வழிமறித்துள்ளார்.

அப்போது மறைந்திருந்த மூத்த சகோதரி  உடனே முன்வந்தார். பின்னர் இருவரும் இளைஞரை தாக்கி, பெல்டால் அடித்தனர்.   இதையடுத்து மாணவிகளின் தயார் காவல் நிலையத்தில் இளைஞர் மீது புகார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்