தாய் மீது தாக்குதல் நடத்திய தந்தையைக் கொன்ற மகன் கைது!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (15:21 IST)
தாயைத் தாக்கிய தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ( சிவசேனா – பாஜக ஆதரவு  அணி) ஆட்சி நடைபெற்று வருகிறது.இம்மாநிலத்தின் தானே மாவட்டம் அபிர் நாத் என்ற பகுதியில் வசிப்பவர் ராஜேஷ்(52). இவர் தன்  மனைவி  மற்றும் மகன் பிரகாஷுடன் வசித்து வருகிறார்.

சில நாட்களாக ராஜேஷுக்கும், இவர் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு  இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. அப்போது, ராஜேஷ் தன் மனைவியை தாக்கியுள்ளார்.

இதற்கு, பிரகாஷ் தன் தந்தையை கண்டித்துள்ளார். இருப்பினும் இது தொடர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று ராஜேஷ் மீண்டும் தன் மனைவியைத் தாக்கியுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த பிரகாஷ்( 19 வயது) , கூர்மையான ஆயுதம் கொண்டு தன் தந்தையை தாக்கியுள்ளார். இதில்,  ராஜேஷ் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து பலியானார்.

இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments