Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளுகுளு...ஏசிக்குள் சொகுசாக இருந்த பாம்பு - வைரலாகும் போட்டோ

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (16:12 IST)
புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. நேற்று முன் தினம் இவர் தன் வீட்டின் படுக்கையறையில் பொருத்தப்பட்டிருந்த ஏசியை ஆன் செய்தார். அப்போது ஏசிக்குள் கிருந்து ஒரு சத்தம் கேட்டது. உடனே ஏசி தான் பழுதாகிவிட்டதாகப் பதறிப்போய் அதை அணைத்துவிட்டார்.
இதனையடுத்து நேற்று காலையில் ஏசி மெக்கானிக்கை அழைத்து வந்து ஏசியை சரிசெய்ய முயன்றார். மெக்கானிக்  ஏசியின் மேல்டாப்பை கழற்றி  சரிசெய்ய முயன்றார். அப்பொழுது 3 பாம்பின் தோல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
பின்னர் தனது கையில் இருந்த கருவியால்  அதை நகர்த்தினார். அங்கு மறைந்திருந்த ஒரு பாம்பு சட்டென்று இன்னொரு பக்கத்துக்குச் சென்றுவிட்டது.
 
இதையடுத்து ஏழுமலை வனத்துறைக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் சிலமணி  போராடி மறைந்திருந்த பாம்பைப் பிடித்தனர்.
இதனையடுத்து வனத்துறையினர் பாம்பை பத்திரமாக வனத்தில் விட்டனர். அதாவது வீட்டுக்கு வெளியில் இருந்து வந்த பாம்பு ஏசிக்குள் குடியிருந்து தன் சட்டைகளைக் கழற்றியுள்ளது தெரியவந்தது.
 
வீட்டின் ஏசிக்குள் பாம்பு இருந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments