Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்'

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் 'ரைஸ் பக்கெட் சேலஞ்ச்'
, திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (15:41 IST)
சில நாட்களாக இணையதளத்தில் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் என்ற வீடியோ வேகமாகப் பரவி வந்தது. ஏஎல்எஸ் நோய்க்கு நிதி திரட்ட ஆரம்பிக்கப்பட்ட சேலஞ்ச் சுய விளம்பரமாகவும், பொழுதுபோக்காகவும் மாறியது. உலக பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலங்கள் வரை அனைவரும் ஐஸ் பக்கெட் வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழை மக்களின் உணவுப் பற்றாக்குறையைத் தடுக்கும் தடுக்கும் நோக்கத்துடன் அருகில் இருக்கும், உணவு தேவைப்படும் ஒருவருக்கு ஒரு பக்கெட் அரிசியோ அல்லது 100 ரூபாய் பணத்தையோ தர வேண்டும். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் உங்களது நண்பர்களை டேக் செய்ய வேண்டும். இதனை # குறியீட்டுடன் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் என்று ட்ரெண்ட் செய்ய வேண்டும்.
 
இதனை ஹைதராபாத்தை சேர்ந்த மஞ்சு லதா என்பவர் இதற்காக சமூக வலைதளங்களில் தனி பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல் இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
 
தேச மக்களின் தேசிய தேவை என்ற டேக் வார்த்தையுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ரைஸ் பக்கெட் சேலஞ்ச் மூலம் ஒருவரது தேவை நிறைவேற்றப்படுகிறது.
 
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் தண்ணிர் தேவையில்லாமல் கொட்டப்படுவது போன்ற செயல்கள் இதில் இல்லை என சமூக ஆர்வளர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருவரது உணவு தேவையை பூர்த்தி செய்வது சரிதான் ஆனால் இதனையும் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல் விளம்பரமாக்கி விடாதீர்கள் என்ற கோரிக்கையும் இவர்கள் மீது விழத்தான் செய்கிறது.
 
இதில் ஆச்சர்யம் என்னவெனில் இதுவரை எந்த பிரபலமும் இதனை செய்ததாக பதிவு செய்யவில்லை. சாதாரண மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் பதிய துவங்கியுள்ளனர். இதற்கெல்லாம் பிரபலங்கள் களமிறங்குவார்களா?

Share this Story:

Follow Webdunia tamil