Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது – ப. சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (15:21 IST)
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்றதாக உள்ளது – ப. சிதம்பரம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டடதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் பல சலுகைகளை மக்களுக்கு அறிவித்திருந்தார். இதற்கு  பாரத  பிரதமர் மோடி  தனது டுவிட்டர் பக்கத்தில்  ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பாராட்டுகள் தெரிவித்தார். இந்நிலையில்,   காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் ரெப்போ  விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியிம்ன் அறிவிப்புக்கு  வரவேற்பு தெரிவித்ததுடன் வங்கிகள் மக்களுக்கு கடன் வழங்காமல் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.


சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்:


 
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கூறியதாவது :

பணப் புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரொபோ வட்டி விகிதத்தை குறைத்து நடவடிக்கையை  வரவேற்கிறேன்.

ஆனால், இ.எம்.ஐ தேதிகளை ஒத்தி வைப்பது குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு தெளிவற்ற நிலையில் உள்ளது. மேலும் இ.எம்.களை செலுத்துவற்கான அனைத்து தேதிகளும் ஒத்தி வைக்க வேண்டும் என்பதே கோரிக்கை என  தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலையை காட்டிக் கொடுத்த ‘கூகிள் மேப்’! ஒரு ஆண்டு கழித்து வெளியான மர்மம்! - என்ன நடந்தது?

எங்கே பழனிசாமி? கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்.. அமைச்சர் ரகுபதி

எம்பிக்களை தள்ளிவிட்ட விவகாரம்: ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

14 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுதலையா? நீதிபதி விதித்த நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments