Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 காதலிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்த நபர்!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (23:08 IST)
தெலுங்கானா  மாநிலத்தில் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த  2 பெண்களை ஒரு நபர் திருமணம் செய்துள்ளார்.
 
தெலுங்கானா மா நிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள. ஏர்ரபோரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சத்திபாபு. இவர், பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், இடையில் நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த  நிலையில், தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னகுமாரியை அவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து வந்துள்ளார்.

அதேசமயம், தன் முறைப்பெண் சுனிதாவையும் அவர் காதலித்து வந்துள்ளார். ஒரு நேரத்தில் இரு பெண்களையும் அவர் காதலித்து வந்த நிலையில், ஸ்வப்னாவுக்கு பெண் குழந்தையும், சுனிதாவுக்கு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.

இதையடுத்து, இரு பெண்களின் வீட்டினரும், தங்கள் மகளை சத்திபாபுவை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளனர்.

பின்னர், இரு குடும்பத்தினரும், கலந்து பேசி,  ஒரே மேடையில், சத்திபாபு பெண்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ள முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி, இன்று சத்திபாபு இரண்டுபெண்களையும் திருமணம் செய்துகொண்டனர். இந்தக் கிராமத்தில் ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments