Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு சூடு வைத்து, நாக்கை அறுக்க முயன்ற செவிலியர் கைது!

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (20:31 IST)
டெல்லியில் 7 வயது சிறுமியின் நாக்கை கத்தியால் அறுத்துச் சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள, ஒரு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருபவர் ரேணுகுமாரி. இவருக்கு வயது 50 ஆகும்.

இவர் 7 வயது மகளை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில் அப்பெண்ணைத் தத்தெடுத்த நாள் முதற்கொண்டு அவரை கொடுமை படுத்திச் சித்ரவதை செய்து, அவரது உடலில் காயம்படுத்தியுள்ளனர்.

சிறுமிக்கு அவர் சூடு வைத்து ரசித்ததுடன், சிறுமியின் நாக்கை அறுக்கும் அளவு கொடூரமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிக்குச் சென்று வீட்டில் தனக்குச் சித்தி சூடு வைத்தும் கொடூமை படுத்தியதை காயங்களுடன் ஆசிரியரிடம் காட்டியுள்ளர்.

இதையடுத்தும் ஆசிரியர் போலீஸில் தகவல் கொடுத்தார், அதன்படி, சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரேணுகா குமாடி,அவரது கணவர் மற்றும், மகனைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

உச்சி மதிய நேரத்தில் சாப்பாடு ஆர்டர் பண்ணாதீங்க..! – ஸொமாட்டோ கோரிக்கையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தலைகீழாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய காவலர்.. வீடியோ வைரலானதால் பணியிட மாற்றம்..!

சோகத்தில் முடிந்த விமான சாகசம்.. வெடித்து சிதறிய விமானம்! – வைரலாகும் வீடியோ!

சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments