Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் கேட்ட மாணவிகளை சிறுநீர் குடிக்க சொன்ன தலைமை ஆசிரியர்! - அதிரடி சஸ்பெண்ட்!

Prasanth Karthick
புதன், 4 செப்டம்பர் 2024 (14:36 IST)

சத்தீஸ்கரில் அரசு பள்ளி ஒன்றில் சுத்தமான தண்ணீர் கேட்ட மாணவிகளை சிறுநீர் குடிக்கும்படி சொன்ன தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் பூலிதுமர் (Phoolidumar) என்ற பகுதியில் அரசு இடைநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த பள்ளியில் வழங்கப்பட்டு வந்த குடிநீரானது சுத்தமாக இல்லையென தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே புகார் இருந்து வந்துள்ளது.

 

இதையடுத்து அந்த பள்ளியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவிகள் சேர்ந்து தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண த்ரிபாதியை அணுகி பள்ளிக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

ஆனால் மாணவிகள் கோரிக்கையால் கோபமடைந்த ராமகிருஷ்ண த்ரிபாதி, மாணவிகளை சாக்கடை தண்ணீரை குடிக்கும்படியும், சிறுநீரை குடிக்கும்படியும் சொல்லி மேலும் பல வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் ஊர் கிராமத் தலைவரிடம் கூறியுள்ளனர்.

 

இந்த விவகாரம் கிராமத் தலைவர் மூலமாக அம்மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்ற நிலையில், அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியரால் தலைமை ஆசிரியரை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ராமகிருஷ்ண த்ரிபாதி. தவறு என நினைத்ததை பயப்படாமல் தட்டிக்கேட்ட மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments