Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்பு...!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (13:02 IST)
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகை மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தில் திங்கள் கிழமை விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி சுமார் 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதை அடுத்து சிறுமியை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது
 
இந்நிலையில் சுமார் 9 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமிக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  
 
சிறுமியின் தந்தை அப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும், சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஆழ்துளைக் கிணறு நீண்ட காலத்திற்கு முன்பு தோண்டப்பட்டது. ஆனால் பின்னர் கைவிடப்பட்டு திறந்து விடப்பட்டதாக  அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு - தாம்பரம் இடையே ஏசி பஸ்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை..!

கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.360 குறைவு.. இன்னும் குறையுமா?

பள்ளி கூரை இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி.. 17 பேர் படுகாயம்: பெற்றோர் அதிர்ச்சி..!

நீரில் மூழ்கிய தற்காலிக சாலை.. கர்ப்பிணி பெண்ணை ஓடை வழியாக தூக்கி சென்ற உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments