பெங்களூரில் விமானப்படை அதிகாரியை பைக்கில் வந்த நபர் தாக்கியதாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளால் அதிகாரியின் நாடகம் அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் பெங்களூரில் இந்திய விமானப்படை அதிகாரி ஷிலாதித்யா போஸ் மற்றும் அவரது மனைவி மதுமிதா காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பைக் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பைக்கை ஓட்டி வந்த விகாஸ் குமார் என்பவர், ஷிலாதித்யாவை மோசமாக தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு விகாஸ் குமார் கைது செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் குற்றச்சாட்டிற்கு நேர்மாறாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விமானப்படை அதிகாரி ஷிலாதித்யாதான், பைக்கில் வந்த விகாஸ் குமாரை கடுமையாக தாக்குகிறார். சுற்றி இருப்பவர்கள் அவரை சமாதானம் செய்ய , அடிவாங்கிய விகாஸ் குமார் திரும்ப தாக்காமல் நிற்கிறார்.
இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பலர், உண்மையாக பாதிக்கப்பட்டவர் மீதே குற்றத்தை சாட்டியிருப்பதாகவும், விகாஸ் குமாரை தாக்கிய விமானப்படை அதிகாரியைதான் கைது செய்திருக்க வேண்டும் என கூறி சமூக வலைதளங்களில் #ArrestWingCommander என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Edit by Prasanth.K