Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் தான் காப்பாற்ற வேண்டும் - ப. சிதம்பரம்

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (20:46 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ’ ப. சிதம்பரம் கைது செய்யப்படுவதை விடவும் தலைமறைவாக இருப்பது  மிகவும் மோசமானது. அதைவிட அவர்  ஒரு கோழை’ என்று ஆடிட்டர் மற்றும் துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 
இந்நிலையில்  சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முனைப்பாக உள்ளது. அதேசமயம் சிதம்பரம் தரபில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து தற்போது ப.சிதம்பரம் எங்கே என தெரியாத நிலையில், பல அரசியல் தலைவர்கள் இது குறித்து பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சிதம்பரம் கூறியுள்ளதாவது ; தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதாக வெளியான தகவலை கடுமையாக மறுக்கிறேன். உயர்நீதிமன்ற நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் எனது தரப்பு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்தனர்.   7 மாதங்களுக்கு பின்னர் எனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது  டெல்லி உயர் நீதிமன்றம் என்று அவர் தெரிவித்தார். 
 
மேலும், ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நான் குற்றம்சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த எஃஐஆர் பதிவும்  செய்யப்படவில்லை.  ஜன்நாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன.பொய்யர்களால் தவறாக தவறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. சுதந்திரம் பெற போராடினோம். சுதந்திரத்தை காக்கவும் போராடி வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments