Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 29 பேர் பலி

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (11:33 IST)
உத்திர பிரதேசத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில் ஆக்ரா நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து லக்னோ  நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி, 50-க்கும் மேற்பட்டோர் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.
 
இந்நிலையில் யமுனா வழிச்சாலையில் உள்ள கால்வாயில் பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 29 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு  பணிகளை தொடங்கினர்.
 
இதனை தொடர்ந்து உத்தர பிரதேச முதல் மந்திரி ஆதித்யநாத் காயமடைந்தோருக்கு அனைத்து மருத்துவ வசதிகளையும் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 
உத்தர பிரதேச சாலை போக்குவரத்து கழகம் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்கு பதில் நாமே சாப்பிடலாம்: இறால் வளர்ப்பு நிபுணர்கள் கருத்து..!

கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை..! பொறியியல் இடங்களில் 80% மாணவர் சேர்க்கை..!

இந்தியாவில் அணுகுண்டு வீசுங்கள்! அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் கடைசி வீடியோ!

TNPSC குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.. முதன்மை தேர்வு தேதியும் அறிவிப்பு..!

மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் மக்களுக்கு பயனும் இல்லை: செல்லூர் ராஜூ

அடுத்த கட்டுரையில்
Show comments