Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக; வாக்கு வங்கியில் தோல்வியைத் தழுவியது

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (11:55 IST)
ஜி.எஸ்.டி. வரி மற்றும் பண மதிப்பிழப்பு காரணமாக பாஜக ஓட்டு வங்கியில் பெரும் சரிவை தழுவியுள்ளது. இது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றது, 77 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 44 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ் 20 இடங்களைப் பிடித்து தோல்வியடைந்துள்ளது.
குஜராத்தில், கடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில், 117 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது, தற்பொழுது நடைபெற்ற தேர்தலிலோ பாஜக 100 தொகுதிகளை கூட பிடிக்க முடியாமல் 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
 
பாஜக வின் இத்தோல்விக்கு  ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவை தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பின் தாக்கம் அதிகமுள்ளதால் கிராமப்புறமுள்ள தொகுதிகளில், காங்கிரஸ் 62 இடங்களையும், பாஜக  43 இடங்களையும் பிடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments