Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை தோல்வியாக்கும் கலையை காங்கிரஸிடம் கற்கலாம்: சிவசேனா கிண்டல்..

Mahendran
வியாழன், 10 அக்டோபர் 2024 (11:03 IST)
வெற்றியை தோல்வியாக்கும் கலையை காங்கிரஸ் இடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான உத்தவ் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹரியானாவில் பாஜகவுக்கு எதிராக சூழ்நிலையில் இருந்த நிலையில், விவசாயிகள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாகத்தான் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்க கோட்டை விட்டது என்று உத்தவ் சிவசேனா அணியின் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி அதீத நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தான் காரணம். மேலும், பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று எந்த கருத்துக்கணிப்பும் கூறவில்லை. காங்கிரஸ் வெற்றி பெறும் சூழல் இருந்தபோது, வெற்றியை எப்படி தோல்வியாக்க வேண்டும் என்ற கலையை காங்கிரஸ் கற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தனர்.
 
காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலை மேலிடத்தால் தடுக்க முடியவில்லை என்றும், காங்கிரஸ் கட்சியின் பலவீனம் காரணமாக தான் ஹரியானாவில் பாஜக வென்றது என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளன. மேலும், காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் என்றும், தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற தன்னம்பிக்கையே அக்கட்சியின் தோல்விக்கு காரணம் என்றும் சிவசேனா உத்தவ் அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments