Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதுக்கள் தலைவர் உள்பட 2220 பேர்களுக்கு கொரோனா: ஹரித்துவார் கும்பமேளாவில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (07:38 IST)
ஹரித்துவாரில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்றுக் கொண்டிருப்பதை அடுத்து இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அங்கு வந்திருக்கும் பக்தர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமல் இருப்பதால் தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
இந்த நிலையில் கும்பமேளா நடைபெறும் ஹரித்வாரில் நேற்று வியாழக்கிழமை மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி ஹரித்வார் கும்பமேளாவில் பங்கேற்ற ஏராளமான சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
மேலும் சாதுக்களின் அமைப்பான அகாடாக்களின் தலைவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஹரித்வாரில் கொரோனா அதிவேகமாக பரவுவதால் 2 அகாடாக்கள் கும்பமேளாவை விட்டு வெளியேறியது என்றும் செய்தி வெளிவந்துள்ளது. நிர்வாண சாதுக்கள் அமைப்பான மகா நிர்வாணி அகாடா தலைவர் சுவாமி கபில்தேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! இனி புதன்கிழமைதான்!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் மார்ட்டின் மருமகன்.. புதுவையில் மார்ட்டின் மகன்.. பாஜகவில் இணைகிறாரா?

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments