Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

Mahendran
புதன், 23 ஏப்ரல் 2025 (10:44 IST)
பெஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர். 
 
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள்   சரமாரி தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்,  
 
இந்த தாக்குதலின் போது, கர்நாடகாவின் ஷிவமோகா பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் பல்லவி தம்பதியினர், அவர்களது மகனுடன் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 
 
பெஹல்காமில் நடந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் மஞ்சுநாத்தை அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவம் பல்லவி கூறியதாவது: "  நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பெஹல்காமில் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது என் கண்முன்னே என் கணவரை சுட்டு கொன்றனர். 4 பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். என் கணவரை கொன்றதை போல என்னையும் கொன்றுவிடுங்கள் என்று சொல்லியிருந்தேன். அப்போது, உன்னை கொல்ல மாட்டேன், நடந்ததை உங்கள் பிரதமர் மோடியிடன் போய் சொல் என்று ஒரு பயங்கரவாதி தெரிவித்தார்." என்று கூறினார்.
 
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரும் ஆண்களே என்பதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

இனி வெப்ப அலை இல்லை.. வரும் நாட்களில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: தஞ்சையில் பரபரப்பு..!

10, 11 ஆம் வகுப்புகளுக்கு துணைத் தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments