Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியை தகர்க்க சிமி திவீரவாதிகள் திட்டம் - கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (16:24 IST)
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை சிமி அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தகர்க்க இருப்பதாக தேசிய புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தேசிய புலனாய்வுத் துறையினர் சிமி அமைப்பை சேர்ந்த 6 தீவிரவாதிகளை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியின் முத்திரையுடன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக இப்பணம் பயன்படுத்தப்பட இருந்ததாக தெரியவந்தது.
 

 
ஏற்கனவே மத்திய, மாநில புலனாய்வுத்துறை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போதும் திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். 
 
இதையடுத்து விரைவில் திருப்பதிக்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடு வருகை தர உள்ள நிலையில், அப்பகுதிகளில் உயர்நிலை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
 
கடந்த ஆண்டு திருப்பதியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புத்தூரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகளை சென்னை காவல்துறையினர் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments