Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸை வைச்சு அடிக்க சொல்லனுமா..மோடியை கேளுங்க - முதல்வர் காட்டம்!

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (20:36 IST)
நீங்கள் ஓட்டுப் போட்டு மோடியைத்தானே ஜெயிக்க வைத்தீர்கள்..ஆனால் உங்கள் பிரச்சனை நான் தீர்த்து வைக்க வேண்டுமா என மக்களைப் பார்த்து கோபத்துடன் கேட்டுள்ளார் அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல்வர் குமாரசாமி. இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் வெகுவாகப்பரவி வருகிறது.
கிராமத்தில் தங்கும் திட்டத்துக்காக கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ரெய்ச்சூர் என்ற கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் போய்க்கொண்டுருந்தார்.அப்போது மக்களிடம் உள்ள பிரச்சனைகளை பற்றியும் அவர் கேட்டுக்கொண்டே சென்றார். மக்கள் பிரச்சனைகளை கேட்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே. 
 
அப்போது ஏர்மருஸ் அனல் மின் நிலையம் மற்றும் ஹூட்டி தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும், தொழிலாளர்கள் பலர் தங்களது கோரிக்கைகளை பலத்த கோஷத்துடன் தெரிவித்தனர்.
இதனால் கோபம் அடைந்த முதல்வர் குமாரசாமி , போலீஸை வரவழைத்து உங்கம் மீது தடியடி நடத்த சொல்லனுமா..? நீங்கள் மோடிக்குத் தானே ஓட்டுப்போட்டீர்கள்..உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கனுமா .. உங்களுக்கு மரியாதையே கிடையாது என்று ஆவேசமாக பேசினார்.
 
இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் உணர்ச்சிவசப்பட்டனர். ஆனாலும்  ஏர்மருஸ் அனல் மின் நிலையம் மற்றும் ஹூட்டி தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும், தொழிலாளர்களின் பிரச்சனைகள் இன்னும் ஒருவாரத்தில் தீர்த்து வைக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments