Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவபெருமான் கனவு எதிரொலி: தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டிய பக்தர் கைது

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (05:45 IST)
தெலுங்கானா மாகாணத்தில் உள்ள ஒரு சிவபக்தர் ஒருவர் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலையில் குழிதோண்டி பரபரப்பை ஏற்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.





தெலுங்கானாவின் ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியை சேர்ந்த லகான் மனோஜ் என்ற சிவபக்தரின் கனவில் ஹைதராபாத் - வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் சிவலிங்கம் இருப்பதாக சிவபெருமான கூறினாராம். உடனே இந்த விஷயத்தை அவர் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

அந்த அதிகாரியும் அவர் சொன்ன இடத்தில் குழிதோண்ட அனுமதித்துள்ளார். சுமார் 8 அடிக்கும் மேல் குழிதோண்டியும் எந்த லிங்கமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் - வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் குழிதோண்டியதால் டிராபிக் நெருக்கடி ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் குழிதோண்டிய பக்தரையும், குழிதோண்ட அனுமதித்த கிராம நிர்வாக அதிகாரியையும் போலீசார் கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments