பெண் வட்டாட்சியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:29 IST)
தெலுங்கானாவில் பெண் வட்டாட்சியரை அலுவலகத்துக்குள் புகுந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் அப்துள்ளப்பூர்மெட்டில் வட்டாட்சியராக பணி புரிந்து வருபவர் விஜயா ரெட்டி. இன்று வழக்கம்போல விஜயா ரெட்டி பணி புரிந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் விஜயா மீது பெட்ரோலை ஊற்றியுள்ளனர். இதை சற்றும் எதிர்பாராத விஜயா சுதாரிப்பதற்குள் அவர் மீது தீயை பற்றவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியது.

இந்த சம்பவத்தில் அலுவலகத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார் விஜயாரெட்டி. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயா லஞ்சம் கேட்டதால் அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அலுவலகத்துக்குள் புகுந்து பெண் வட்டாட்சியரை கொளுத்தி கொன்ற சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்துற ஐடியா இல்ல! அணு ஆயுத படை ஒத்திகை நடத்திய ரஷ்யா!

இந்தியா மீதான வரியை 15 சதவீதம் குறைக்கிறோம்.. ஆனால்..? - அமெரிக்கா போடும் கண்டிஷன்!

டிரம்ப் கலந்து கொள்ளும் உச்சிமாநாட்டில் மோடி கலந்து கொள்ள மறுப்பு.. சந்திப்பை தவிர்க்கவா?

தவறான ஊசி போட்டதால் பச்சிளம் குழந்தையின் கையை எடுக்க வேண்டிய நிலை: மருத்துவரின் அலட்சியமா?

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்.. மாரடைப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments