Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கற்பழித்தவருடன் சேர்த்து வைத்த பஞ்சாயத்து: கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை

கற்பழித்தவருடன் சேர்த்து வைத்த பஞ்சாயத்து: கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை
, வியாழன், 27 அக்டோபர் 2016 (15:06 IST)
ஊர் பஞ்சாயத்தின் நிர்பந்தத்தால் பாலியல் பலாத்காரம் செய்தவருடனேயே திருமணம் செய்துக் கொண்ட பெண், மாமியார் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
ஹரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள ஜாகதாரியைச் சேர்ந்தவர் அனுஜ் [வயது 22]. இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை காதலித்து எமாற்றி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால், அனுஜ் உயர் சாதியை சேர்ந்தவர் என்பதால், அவருடைய குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளனர்.
 
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2015ஆம் ஆண்டு அனுஜ் என்பவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, ஊர் பஞ்சாயத்தார்கள் ஒன்றுகூடி பலாத்காரம் செய்த அனுஜ் உடனேயே திருமணம் செய்து வைத்துள்ளார்.
 
அதன்படி கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் அந்த பெண் தனது வீட்டு கூரை மீது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
இந்நிலையில், அந்த இளம்பெண்ணின் தாயார் சரளா, மணமகனின் இல்லத்தார் அவரை சித்ரவதைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். அனுஜின் குடும்பத்தார் தனது மகளிடம் வரதட்சணை மற்றும் பாலியல் வழக்கிற்கு செலவிட்ட பணத்தை தரும்படியும் துன்புறுத்தி உள்ளனர்.
 
எனது மகளுக்கு நீதி வேண்டும்:
 
இது குறித்து கூறியுள்ள சரளா, ”அவர்கள் வழக்கு நடத்தியதற்கான நஷ்ட ஈடு கேட்டு அடிக்கடி துன்புறுத்தினர். ஆனால், நாங்கள் மறுத்துவிட்டோம். இதனால், அவருக்கு தண்ணீர், உணவு கூட கொடுக்காமல் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். அவர் பால்மிகி [தலித்] என்பதால் வீட்டில் உள்ள எந்த பொருளையும் கூட தொட அனுமதிக்கவில்லை.
 
எனது மகளுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அவள் செய்த ஒரே தவறு, காதலில் விழுந்ததுதான். அதற்கான விலையை அவளே கொடுத்துவிட்டாள்” என்று கூறியுள்ளனர்.
 
தற்போது மணமகன் அனுஜ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா??