அரசு பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் நடத்த கூடாது: பள்ளிக்கல்வித்துறை ஆணை

Webdunia
செவ்வாய், 29 மே 2018 (19:39 IST)
பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் தவிர தனியாக மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்து கொண்டிருந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தனியாக டியூசன் நடத்தக்கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று பிறப்பித்த உத்தரவு ஒன்றில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக வீட்டிலோ அல்லது பயிற்சி மையம் அமைத்தோ மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க கூடாது என்றும் அதுமட்டுமின்றி பயிற்சி மையம், சிறப்பு வகுப்புகளும் அவர்கள் நடத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
 
ஆசிரியர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிருப்தியை பெற்றிருந்தாலும் பொதுமக்களும் மாணவர்களும் இந்த உத்தரவை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இதேபோன்ற உத்தரவு தமிழகத்திலும் பிறப்பிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments