Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரியே இல்லாமல் தப்பித்த மக்களின் அத்தியாவசிய தேவைகள்!

ஜிஎஸ்டி வரி விதிப்பில் வரியே இல்லாமல் தப்பித்த மக்களின் அத்தியாவசிய தேவைகள்!

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (13:09 IST)
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழக சட்டசபையில் இந்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.


 
 
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசிகள் கடுமையாக உயரும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களான பால், தயிர், பழங்கள், காய்கறிகள், பருப்பு, உணவு தானியங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற உள்ளூர் ரயில் சேவைகளுக்கும், ஹஜ் யாத்திரை போன்ற புனித யாத்திரைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிற ஜிஎஸ்டி வரி விதிப்பு 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு விதமான வரி விதிப்பு இருக்கும். இதில் மேலே குறிப்பிடப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments