Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லா பிரச்சனைக்கும் தமிழர்கள் தான் காரணமாம்: மத்திய அமைச்சரிடம் வெளிப்பட்ட கன்னட வெறி!

எல்லா பிரச்சனைக்கும் தமிழர்கள் தான் காரணமாம்: மத்திய அமைச்சரிடம் வெளிப்பட்ட கன்னட வெறி!

எல்லா பிரச்சனைக்கும் தமிழர்கள் தான் காரணமாம்: மத்திய அமைச்சரிடம் வெளிப்பட்ட கன்னட வெறி!
, புதன், 14 செப்டம்பர் 2016 (14:57 IST)
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதை கண்டித்து கர்நாடகத்தில் பெரும் கலவரங்கள் வெடித்தன. தமிழர்கள் தாக்கப்பட்டனர், தமிழக லாரிகள் தாக்கப்பட்டு ஓட்டுநர்களை அவர்களை நையப்புடைத்தனர்.


 
 
தமிழக பேருந்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழக கடைகள், ஹோட்டல்கள், நிறுவனங்கள் கல்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகின. இவற்றை பார்த்து பொங்கியெழுந்த சில தமிழர்கள் தமிழகத்தில் ஒரு இடத்தில் ஒரு கன்னட ஓட்டுனரையும், மற்றொரு இடத்தில் பேருந்துகளை தாக்கினர்.
 
தமிழகத்தில் வேறு எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்பாவி தமிழர்களை தாக்கியதால் தமிழகத்தில் இந்த ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றது. இது நாடே அறிந்த உண்மை.
 
உண்மை இப்படி இருக்க பாஜக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உண்மைக்கு புறம்பாக கன்னட வெறியுடன் பேசியுள்ளார். பெங்களூர் வன்முறைக்கு காரணம் தமிழர்கள் தான் என அபாண்டமாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த வன்முறையும், தமிழர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையால் நடந்தது.
 
தமிழக மக்களின் ஆத்திரமூட்டல் தான், அனைத்துக்கும் காரணம். ஏனென்றால், தண்ணீரே இல்லை என்றாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறோம். உச்ச நீதிமன்றம் மற்றும் நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.
 
ஆனால், தமிழகத்தில் கன்னட மக்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். கன்னடர்களின் உணவகங்கள் மீதும் கற்கள் வீசத் தொடங்கிவிட்டனர். தமிழர்கள் கர்நாடகத்தவரிடம் தண்ணீர் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், வன்முறையையும் தூண்டியுள்ளனர். இதுவே, கர்நாடக மக்கள் வன்முறையில் இறங்குவதற்கு இயல்பான காரணமாக அமைந்துள்ளது.
 
தன்னிச்சையாக கர்நாடக மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கவில்லை. தமிழக மக்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையால் வேதனையடைந்த கன்னடர்கள், உணர்வுகளை வெளிப்படுத்த சில பேருந்துகள் உள்ளிட்டவற்றை சூறையாடினர்.
 
இவ்வாறு கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேசியுள்ளார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, மத்திய அமைச்சர் என்ற பொறுப்புணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் கன்னட வெறியுடன் பேசியுள்ளார் அவர்.
 
அப்பாவி தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் தெரிவிக்க கூடிய உயரிய பொறுப்பில் உள்ள ஒரு மத்திய அமைச்சர், கன்னடர்களின் தாக்குதலுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.
 
இது தான் மத்திய அமைச்சரின் பணியா?. ஒட்டு மொத்த தேசத்திற்கும் பொதுவான அமைச்சராக இருப்பவர், இப்படி தான் சார்ந்த மாநிலத்தின் மக்கள் செய்த தவறுக்கு நியாயம் கற்பித்து, பிற மாநிலத்தின் மீது அபாண்ட பழி போடுவது தான் மத்திய அமைச்சரின் கண்ணியமா? என்ற கேள்வி எழுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிந்தது பஞ்சாயத்து : தமிழக காங்கிரஸ் தலைவரானார் திருநாவுக்கரசு