சீன எல்லையில் வீர மரணம் அடைந்தவரில் ஒருவர் தமிழர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (14:24 IST)
சீன எல்லையில் வீர மரணம் அடைந்தவரில் ஒருவர் தமிழர்
கடந்த சில நாட்களாகவே இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் போர் பதற்றம் இருந்தது என்பதும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் எல்லையில் குவிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இரவு நடந்த திடீரென சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார். சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு பதிலடியும் இந்திய தரப்பில் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சீன எல்லையில் நேற்று இரவு நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை என்ற பகுதி அருகே கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவர் தான் வீரமரணம் அடைந்தவர்களின் ஒருவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது
 
லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணம் அடைந்த மூவரில் ஒருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

அடுத்த கட்டுரையில்
Show comments