Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்டது தமிழ்வழி பள்ளிகள்.. தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (19:10 IST)
குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்திலும் தமிழ் வழி கல்விகள் மூடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட தமிழ் வழி பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
தெலுங்கு மொழி கட்டாயம் என்ற  அறிவிப்பின் காரணமாகவே தமிழ் கல்வி நிறுவனங்களில் கூட தமிழ் பாடம் நீக்கப்பட்டதாகவும் தற்போது அவர்கள் தெலுங்கு மொழியை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
தெலுங்கு மொழி கட்டாயம் என்ற சட்டத்தால் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 8 லட்சம் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க முடியாமல் பாதிப்படைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments