Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு தரும் ஜீவனாம்சம் ரூ.400 கோடி?

ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு தரும் ஜீவனாம்சம் ரூ.400 கோடி?
, புதன், 30 ஜூலை 2014 (13:19 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தனது மனைவியுடன் விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ள  நிலையில், அவர் அவரது மனைவிக்கு  ரூ.400 கோடி ஜீவனாம்சம் தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசேன் கானை திருமணம் செய்து 14 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் அண்மையில் இத்தம்பதி விவாகரத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.
 
இதனால் இவர்களின் 8 மற்றும் 6 வயதான மகன்கள் தாய் சுசேனுடன் வேறு ஒரு வீட்டில் வசித்துவருகின்றனர்.  
 
இந்நிலையில், சுசேன் தனக்கு ஹிருத்திக் ரோஷன் ரூ.400 கோடியை ஜீவனாம்சமாக தர வேண்டும் எனக் கேட்டதாகவும், அதனைத் தர ஹிருத்திக் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 

Share this Story:

Follow Webdunia tamil