Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணா தன்கட்டை தாக்கும் சுஷில்குமார்… வீடியோவை வெளியிட்ட போலிஸ்!

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (09:15 IST)
சமீபத்தில் கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் பற்றிய வீடியோ ஒன்றை டெல்லி போலிஸ் வெளியிட்டுள்ளது.

பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மற்றுமொரு மல்யுத்த வீரரான சாகர் தன்கட்டுக்கும் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சாகர் தன்கட், சுஷில் குமார் கோஷ்டி இடையே டெல்லியில் தகராறு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சாகரை மோசமாக தாக்கிவிட்டு சுஷில்குமார் கோஷ்டி தப்பியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சாகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த போலீஸார் சுஷில் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாகி இருந்த சுஷில் குமாரை கடந்த 23ஆம் தேதி  டெல்லியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் சுஷில் குமார் தான் கொல்லும் எண்ணத்தோடு அவரைத் தாக்கவில்லை என்றும் அவரின் தவறுக்கு பாடம் கற்பிக்கவே அவ்வாறு செய்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து ராணா தன்கட்டை தாக்கும் வீடியோவை போலிஸார் வெளிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திணிப்பை நிரூபித்தால் 99 லட்சம் ரூபாய் பரிசு.. தமிழக பாஜக அறிவிப்பு

திருமண நிகழ்ச்சியில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை.. நீதிமன்றம் அறிவுறுத்தல்..!

எடப்பாடி பழனிசாமி சொன்னது உண்மைதான்: அண்ணாமலை விளக்கம்..!

இன்று மின்சார ரயில்கள் ரத்து.. சென்னை போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு..!

கைவிட்ட அமெரிக்கா.. உக்ரைனை ஏவுகணைகளால் துளைத்த ரஷ்யா! - குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments