Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக ஓடிவந்து உதவி செய்த மோடி

சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக ஓடிவந்து உதவி செய்த மோடி
, சனி, 23 மே 2015 (13:51 IST)
ஆக்ராவில், இதய நோயால் அவதிப்பட்ட  சிறுமி ஒருவருக்கு, இருதய அறுவை சிகிச்சை செய்ய, பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ய முன்வந்துள்ளார்.
 
ஆக்ராவில், தையபா என்ற சிறுமிக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளால் கடந்த சில வருடமாகவே அவதிப்பட்டு வந்தார். 
 
இவரது நோய்க்கு, சிக்கை அளிக்க மருத்துவமனையை அவர்களது குடும்பத்தினர் நாடியபோது, தையபாவுக்கு பிறவியிலேயே, இதயத்தில் ஓட்டை உள்ளதாகவும், அதனால், அவருக்கு அறுவை சிகிச்சை உடனே செய்ய வேண்டும் என்றும், அதற்கு பெரியதொகை செலவாகும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு தையபா குடும்பம் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.  
 
சிறுமி தையபாவின் தந்தை செருப்புதைத்து தான் தனது குடும்பஜீனவத்தை நடத்தி வருகின்றார். இதனால், தனது அன்பு மகளின் சிகிச்சை செலவை அவரால் கொடுக்க முடியாமல் ரத்தக்கண்ணீர் வடித்தார். 
 
இந்நிலையில், சிறுமி தையாபா தனது தந்தை உதவியோடு பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஒரு கடிதம் எழுதினார். அதில், தனக்கு பிறவியிலேயே இதயத்தில் ஓட்டை உள்ளதையும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய பணம்  இல்லாத சூழ்நிலையையும், தனது ஏழ்மையான குடும்ப நிலையையும் விரிவாக கடிதம் மூலம் எழுதி அனுப்பிவைத்தார்.
 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளிநாடு சென்று இருந்த மோடி இந்தியா திரும்பி வந்தார். உடனே, சிறுமியின் கோரிக்கை கடிதத்தை படித்து மனம் உருகிய அவர், டில்லி ஜி.பி.பந்த் மருத்துவமனையில், தையபாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக கூறி, இதற்கான, அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கும் என்று  பதில் கடிதம் அனுப்பிவைத்தார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் பதில் கடிதம் கண்டும், இந்த உதவியை செய்ய முன்வந்தை நினைத்தும், மகிழ்ந்து போன அந்த சிறுமி தையபாவும், அவரது குடும்பத்தினரும் மோடிக்கு, கோடி நன்றி சொல்லி பதில் கடிதம் அனுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil