Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முரண்டு பிடித்த மத்திய அரசு; கையை விரித்த உச்ச நீதிமன்றம்: மேலாண்மை வாரிய உத்தரவு நிறுத்தம்!

முரண்டு பிடித்த மத்திய அரசு; கையை விரித்த உச்ச நீதிமன்றம்: மேலாண்மை வாரிய உத்தரவு நிறுத்தம்!

முரண்டு பிடித்த மத்திய அரசு; கையை விரித்த உச்ச நீதிமன்றம்: மேலாண்மை வாரிய உத்தரவு நிறுத்தம்!
, செவ்வாய், 4 அக்டோபர் 2016 (18:04 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தற்போது அந்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


 
 
நீண்டு காலமாக இருந்து வரும் காவிரி பிரச்சனையில் இப்பொழுதாவது தமிழகத்துக்கு நீதி கிடைக்காத என காத்திருந்த விவசாயிகளுக்கு சமீபத்தில் நடக்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக அரசும் நீரை திறக்காது, மத்திய அரசும் அதற்கான அழுத்தத்தை கொடுக்காது என இருந்த நிலையில் நீதிமன்றம் மூலம் தான் தமிழகம் தனக்கான உரிமைகளை பெறுவதில் போராடி வந்தது. ஆனால் கடசியாக மூன்று முறை தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த துளி அளவும் மதிக்காமல் இருந்தது கர்நாடக அரசு.
 
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசும் தன் பங்கிற்கு புதிதாக இரு பிரசனையை கிளப்பி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது எனவும், இந்த உத்தரவை பிறப்பிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உரிமை இல்லை என வாதிட்டது.
 
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டால் உச்ச நீதிமன்றமும் வேறு வழியில்லாமல் தான் பிறப்பித்த உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. தொடர் சம்பவங்களால் அதிருப்தியடைந்த தமிழக விவசாயிகள் நாளை சேப்பாக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரியுமா?