Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலத்தை கடத்தும் மத்திய அரசு; உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (15:40 IST)
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுமுறையாகும் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


 

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. அதில் கூறியதாவது:-
 
காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில், தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. நீதிமன்றம் தலையிட முடியாது. 
 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் முடிவிற்கு கட்டுபட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த தயாராக இருக்கின்றோம் என்று வாதிடப்பட்டுள்ளது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுமுறையாகும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மீது அதிருப்தி தெரிவித்தது. மேலும், 2013ஆம் ஆண்டு அரசாணை பிறபித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments