Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (10:17 IST)
பெண் மென் பொறியாளர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் அந்த தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு பெண் மென்பொறியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சனாப் என்பவர் தான் குற்றவாளி என்று போலீசார் கண்டுபிடித்து விசாரணை செய்தனர்.
 
இதனை அடுத்து சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
 
ஆனால் அதை எதிர்த்து சனாப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் சந்தேகத்திற்கு இடம் இன்றி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
 
பெண் மென்பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் விடுதலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யமுனை நதியில் விஷம்?! 14 பக்க அறிக்கையை காட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்! - தேர்தல் ஆணையத்தின் ரியாக்‌ஷன் என்ன?

சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம்.. ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம்..! - விண்ணப்பிப்பது எப்படி?

எவ்வளவு பணம் எண்ண முடிகிறதோ, அவ்வளவும் போனஸ்.. சீன நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு..!

சென்னையில் குத்துச்சண்டை வீரர் ஓட ஓட வெட்டி கொலை.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்.. எந்த இணையதளத்தில்?

அடுத்த கட்டுரையில்