மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

Mahendran
வெள்ளி, 23 மே 2025 (13:26 IST)
மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400  கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2023ஆம் ஆண்டு, பெங்களூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மைசூர் மகாராஜா அரச குடும்பத்திற்குச் சொந்தமான 15.39 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மைசூர் மகாராஜா குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 
சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 15.39 ஏக்கர் நிலத்திற்கு ரூ. 3,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடகா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இழப்பீடு தொகையை "TDR" எனப்படும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை (Transferable Development Rights) வடிவில் வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
15.39 ஏக்கர் நிலத்திற்கு ரூ.3400 கோடி என்றால், கிட்டத்தட்ட ஒரு சென்ட் நிலத்திற்கே ரூ. 2 கோடி 22 லட்சம் ஆகும். இதனால், மைசூர் அரச குடும்பம் 'ஜாக்பாட்' அடித்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments